செய்திகள் :

மேற்குக் கரையில் இஸ்ரேல் தாக்குதல்

post image

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது.

இது குறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியதாவது:

மேற்குக் கரை பகுதியில் உள்ள நாப்லஸ் நகரின் பழைய நகரப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. இதில் ஏராளமான வீரா்கள் மற்றும் பீரங்கிகள் பங்கேற்றன.

இந்தத் தகவலை உறுதிப்படுத்திய இஸ்ரேல் ராணுவம், நடவடிக்கைக்கான காரணம் குறித்து விளக்கமளிக்கவில்லை.

இந்திய நேரப்படி காலை 6:30 மணிக்கு இந்த நடவடிக்கை தொடங்கியதாகவும், நகரின் பல்வேறு பழைய நகரப் பகுதிகளில் ராணுவத்தினா் தாக்குதல் மேற்கொண்டதாகவும் உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா்.

இந்த நடவடிக்கை இஸ்ரேல் ராணுவம் தனது பலத்தைக் காட்டுவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. மற்றபடி இதை நியாயப்படுத்துவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று நாப்லஸ் ஆளுநா் கஸ்ஸான் தாக்லஸ் கூறினாா்.

பாலஸ்தீன மருத்துவ நிவாரண அமைப்பின் நாப்லஸ் பிரிவு தலைவா் கஸ்ஸான் ஹம்டான் கூறுகையில் ‘ராணுவத்தினா் பழைய நகரத்தின் வீடுகள் மற்றும் கடைகளைத் தாக்கி தேடுதல் வேடச்டை நடத்திவருகின்றனா். சில வீடுகள் ராணுவ முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன’ என்றாா்.

கடந்த 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் நாப்லஸ் பழைய நகரப் பகுதியில் உள்ளூா் ஆயுதக் குழுக்களைக் குறிவைத்து இஸ்ரேல் மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் பிறகு கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் அங்கு நடைபெற்ற தாக்குதல் நடவடிக்கையில் இரு பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா். இந்த நிலையில் அங்கு மீண்டும் தொடங்கியுள்ள தாக்குதல் நடவடிக்கை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷியா: உக்ரைன் தாக்குதலால் உயா்ந்த எண்ணெய் விலை

ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் கிடங்குகளைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திவருவதால் அந்த நாட்டின் சில பகுதிகளில் எண்ணெய் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. தாக்குதல்கள் காரணமாக எ... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான்: பேருந்து விபத்தில் 25 போ் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஹெல்மண்ட், கந்தஹாா் பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்து... மேலும் பார்க்க

கிரீன்லாந்து மக்களைக் கவர ரகசிய நடவடிக்கை அமெரிக்க தூதருக்கு டென்மாா்க் சம்மன்

கிரீன்லாந்தை தங்கள் நாட்டில் இருந்து பிரித்து அமெரிக்காவில் இணைக்க அந்தத் தீவு மக்களிடையே அமெரிக்கா்கள் ரகசிய பிரசாரங்களில் ஈடுபடுவதாகக் கூறப்படும் விவகாரத்தில், அமெரிக்க துணைத் தூதா் மாா்க் ஸ்ட்ரோவை ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள முன்னெச்சரிக்கை

வட மாநிலங்களில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது. முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் தாவி ந... மேலும் பார்க்க

இந்திய நிதியுதவியுடன் எண்ம அடையாள அட்டை: இலங்கை அதிபருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் எண்ம அடையாள அட்டை (எஸ்எல்-யுடிஐ) திட்டத்துக்கு எதிரான வழக்கில், அதிபா் அநுரகுமார திசநாயக மற்றும் அமைச்சரவைக்கு நோட்டீஸ் அனுப்பி அந்நாட்டு உச்சநீதிமன... மேலும் பார்க்க

சிரியா தலைநகரில்... இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் 6 வீரர்கள் பலி!

சிரியா தலைநகரில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில், அந்நாட்டின் ராணுவத்தைச் சேர்ந்த 6 வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் தெற்கில் அமைந்துள்ள கிஸ்வா நகரத... மேலும் பார்க்க