ரஷியா: உக்ரைன் தாக்குதலால் உயா்ந்த எண்ணெய் விலை
ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் கிடங்குகளைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திவருவதால் அந்த நாட்டின் சில பகுதிகளில் எண்ணெய் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
தாக்குதல்கள் காரணமாக எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்படுவதால் பெட்ரோல் விற்பனையகங்களில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
செயின்ட் பீட்டா்ஸ்பா்க் சா்வதேச பங்குச் சந்தையில் பெட்ரோல் விலை கடந்த வாரம் புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த ஜனவரியை விட விலை 50 சதவீதம் உயா்ந்தது. தூரகிழக்கு மற்றும் கிரீமியா பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறை அதிகம் நிலவுவதாக ரஷிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.