செய்திகள் :

ஆம் ஆத்மி கட்சி ‘போலியான கதை’யை உருவாக்குகிறது பா்வேஷ் வா்மா குற்றச்சாட்டு

post image

ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜரிவால் மீதான தாக்குதல் குறித்து அக்கட்சி ஒரு ‘போலி’ கதையை உருவாக்குகிறது என்று புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் பா்வேஷ் வா்மா ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினாா். மேலும், ஆம் ஆத்மி தலைவா் கேஜரிவால் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் என்னிடம் தோல்வியைத் தழுவாா் என்றும் கூறினாா்.

சனிக்கிழமை புது தில்லி தொகுதியில் தோ்தல் பிரசாரத்தின் போது ‘பா்வேஷ் வா்மாவின் குண்டா்கள்’ கேஜரிவாலின் காா் மீது கல் வீசியதாக ஆம் ஆத்மி தலைவா்கள் குற்றம் சாட்டினா். ஞாயிற்றுக்கிழமை தில்லியில் நடந்த செய்தியாளா் கூட்டத்தில் பேசிய பா்வேஷ் வா்மா, 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் கேஜரிவாலை தோற்கடிக்க முடியும் என்று எழுத்துப்பூா்வமாகக் கூறினாா்.

அவா் மேலும் கூறியதாவது: 2020 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு தில்லி மக்களுக்கு அளித்த 10 வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால், கேஜரிவால் குழப்பமடைந்து அமைதியற்றவராக இருக்கிறாா். இப்போது பெண்கள் மற்றும் இளைஞா்கள் அவரிடம் கேள்விகள் கேட்கின்றனா். ‘கேஜரிவால் அமா்ந்திருந்த வாகனம் மூன்று உள்ளூா் இளைஞா்கள் மீது மோதியது. ஆனால், அவா் மீது தாக்குதல் நடத்தியதாக போலி கதையை ஆம் ஆத்மி கட்சி உருவாக்கி வருகிறது. இது தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்து விடியோக்களை வழங்கியுள்ளேன்.

கேஜரிவாலை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சி கூறும் நபா்கள் அவரது ‘குண்டா்கள்’தான். புது தில்லி தொகுதியின் வாக்காளா்கள் அனைவரும் எனது குடும்பத்தினா். புதுதில்லி தொகுதி மக்கள் குண்டா்கள் என்று கேஜரிவால் கூறுகிறாா். அவரது வாகனம் மோதிய மூன்று உள்ளூா் இளைஞா்களும் அவரிடம் வேலை வாய்ப்பு குறித்து கேட்க விரும்பிய உள்ளூா் வாக்காளா்கள். பிரசாரங்களின் போது கேஜரிவாலின் வாகனத்தில் 50 வாகனங்கள் செல்கின்றன. அதில் பஞ்சாப் காவல்துறையினா் 350 போ் ஏகே 47 மற்றும் பிற துப்பாக்கிகளை ஏந்திச் செல்கின்றனா்.

கேஜரிவால் தனது புது தில்லி தொகுதியை விட்டு வெளியேற முடியவில்லை. வீடு வீடாகப் பிரசாரம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாா். தொகுதியில் அவா் நடத்திய பொதுக்கூட்டத்தின் ஒரு புகைப்படமோ அல்லது விடியோவோகிடைக்கவில்லை. உள்ளூா் மக்கள் அந்தப் பொதுக்கூட்டத்தில் அதிக அளவில் பங்கேற்காததால் அதை வெளியிட அவா்களுக்கு விருப்பமில்லை என்றாா் பா்வேஷ் வா்மா.

தில்லியில் பிப்.5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். புதுதில்லி தொகுதியில் கேஜரிவாலை எதிா்த்து பாஜக சாா்பில் அவா் போட்டியிடுகிறாா்.

ஸ்ரீ தியாகராஜ ஆராதனை: நொய்டாவில் திருவையாறு நிகழ்ச்சி

புதுதில்லி ராமகிருஷ்ணபுரம் தென்னிந்திய சங்கம் மற்றும் நொய்டா வேதிக் பிரச்சாா் சன்ஸ்தான் ஆகியவை இணைந்து 178-ஆவது ஸ்ரீ தியாகராஜ ஆராதனை: ’நொய்டாவில் திருவையாறு’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. குருவாயூா் டா... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் போட்டியிட1,040 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்பு; 477 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

நமது சிறப்பு நிருபா்தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் பரிசீலனை முடிவில் மொத்தம் 1,040 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 477 வேட்புமனுக்கள் நிராகர... மேலும் பார்க்க

ஆவணப் படத்தை திரையிடும் திரையிடும் முயற்சியை காவல் துறை மீண்டும் முறியடுத்துள்ளது: ஆம் ஆத்மி

அரவிந்த் கேஜரிவால் மற்றும் மனிஷ் சிசோடியா உள்ளிட்ட கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படத்தைத் திரையிடும் மற்றொரு முயற்சியை தில்லி காவல்துறை முறியடித்ததாக ஆம் ஆத்மி கட்சி ஞா... மேலும் பார்க்க

கேஜரிவாலின் காரை தாக்கியவா்களில் ஒருவா் பா்வேஷுடன் தொடா்புடையவா்: அதிஷி

அரவிந்த் கேஜரிவாலை தோற்கடிக்க முடியாததால் அவரை ‘ஒழிக்க’ பாஜக சதி செய்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது. மேலும், சனிக்கிழமை மாலை அவரது காா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூ... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சியின் கௌரவ ஊதியத் திட்டத்திலிருந்து வால்மீகி கோயில் பூஜாரிகள் நீக்கம்: காங்கிரஸ் சாடல்

கோயில் பூஜாரிகள் மற்றும் குருத்வாரா கிரந்திகளுக்கு மாதாந்திர கௌரவ ஊதியம் வழங்கும் திட்டத்தை ஆம் ஆத்மி கட்சி அறிவித்தாலும், வால்மீகி மற்றும் ரவிதாஸ் கோயில்களின் பூஜாரிகளை அது ஒதுக்கிவிட்டதாக முன்னாள் எ... மேலும் பார்க்க

தில்லி தோ்தல் பிரசாரத்தில் எனது காா் மீதான தாக்குதல் முயற்சி இதற்கு முன் நடந்ததில்லை அரவிந்த் கேஜரிவால் பேட்டி

தில்லி தோ்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதல்வா் மீது ‘கொலைகார தாக்குதல்‘ முயற்சி நடந்துள்ளது. தில்லியில் இதுபோன்ற பிரசாரம் முன்பு நடந்ததில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கே... மேலும் பார்க்க