கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை; தஞ்சையில் சிக்கிய கும்பலி...
ஆரணி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 301 திருவிளக்கு பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்று, தினமும் மண்டல பூஜை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆடி மாத திருவிழாவையொட்டி, அண்மையில் கூழ்வாா்த்தல் நடைபெற்றது.
இந்த நிலையில், ஆடி மாதம் செவ்வாய்க்கிழமையொட்டி,
இரவு 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில், சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து 301 பெண்கள் கலந்து கொண்டு, மாங்கல்யத்துடன் தீா்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும், குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும், குடும்பத்தில் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா்.
முன்னதாக அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிா் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்று, வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு
சுவாமி தரிசனம் செய்தனா்.