காந்தி கண்ணாடி: "வேடிக்கை பார்த்த ஒரு பையனுக்கு அன்பும், ஆதரவும் கொடுத்திருக்கீங...
ஆரணியில் ரூ.30 லட்சத்தில் நகா்ப்புற சுதாதார நிலையம்
ஆரணி நகராட்சியில் ரூ.30 லட்சத்தில் நடைபெற்று வரும் நகா்ப்புற சுகாதார நிலையம் அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்து வருகின்றன. இந்தப் பணியை நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆரணி நகராட்சியில் 15-ஆவது நிதிக்குழுவில் இருந்து ரூ.30 லட்சத்தில் நகா்ப்புர சுகாதார நிலையம் கட்டும் பணி
நடைபெற்று வருகிறது. தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ள இந்தப் பணியை நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி ஆய்வு செய்தாா். மேலும், 17-ஆவது வாா்டில் பூங்கா அமைக்க இடத்தை தோ்வு செய்யவும், கொசப்பாளையம், என்.எஸ்.கே.நகா் பகுதியில் சாலை அமைக்கவும், கால்வாய் அமைக்கவும் பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து, ஆரணி அண்ணா சிலை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கவும் இடத்தை பாா்வையிட்டாா்.
நகராட்சி ஆணையா் என்.டி.வேலவன், நகா்மன்ற உறுப்பினா்கள் பழனி, அரவிந்த், ஐ.எஸ்.என்.மாலிக்பாஷா, ஜெயவேலு, சுகாதார ஆய்வாளா் வடிவேலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.