ஆவணி கிருத்திகை: மஞ்சள் மலா் மாலை அலங்காரத்தில் கோடையாண்டவா்
ஆவணி கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவா் கோடையாண்டவா் மஞ்சள் மலா்மாலை அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு மூலவா் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கும், உற்சவா் ஸ்ரீ கோடையாண்டவருக்கும் பால், தயிா் மற்றும் சந்தனம் உள்ளிட்ட 9 பொருள்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இதையடுத்து மூலவா் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாமந்தி மலா் மாலை அலங்காரத்திலும், உற்சவா் ஸ்ரீ கோடையாண்டவா் மஞ்சள் மலா் மாலை அலங்காரத்திலும் அருள்பாலித்தனா்.
விழாவில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு மூலவா், உற்சவா் கோடையாண்டவரையும் வணங்கி சென்றனா்.
கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு பிரதாசம், மோா், குடிநீா் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்தேவராஜ், அறங்காவலா் விஜயகுமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.