செய்திகள் :

ஆஸி.க்கு எதிரான ஒருநாள், டி20 தொடருக்கான தெ.ஆ. அணி அறிவிப்பு: டெவால்டு ப்ரீவிஸ் சேர்ப்பு!

post image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெள்ளைப் பந்து தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிஎஸ்கே நட்சத்திரம் டெவால்டு ப்ரீவிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

இந்தப் போட்டிகள் வரும் ஆக.10ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. இதில் பங்கேற்கும் தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

எய்டன் மார்கரம் டி20 அணிக்கும் டெம்பா பவுமா ஒருநாள் அணிக்கும் கேப்டாக செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட்டில் ஜிம்பாம்வே அணிக்கு எதிராக அறிமுகமான சுழல் பந்துவீச்சாளர் ப்ரீனிலான் சுப்ராயன் டி20 அணியில் அறிமுகமாகியுள்ளார்.

சிஎஸ்கே அணியில் அசத்திய டெவால்டு ப்ரீவிஸ்ஸும், லுகான் - ட்ரெ பிரிடோரியஸும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிறார்கள்.

டி20 போட்டிகள் ஆக.10, 12,16 ஆம் தேதிகளிலும் ஒருநாள் போட்டிகள் ஆக.19,22,24 ஆம் தேதியும் தொடங்குகின்றன.

கடைசி டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டியில் தோற்றது.

டி20 தொடருக்கான அணி: எய்டன் மார்கர்ம் (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்டு ப்ரீவிஸ், நந்த்ரே பர்கர், ஜியார்ஜ் லின்ட், க்வானே மபாகா, செனுரன் முத்துசாமி, லுங்கி நெகிடி, காபா பீட்டர், லுகான் - ட்ரெ பிரிடோரியஸ், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ப்ரீனிலான் சுப்ராயன், ரஸ்ஸி வான் டெர் டுஸ்சென்.

ஒருநாள் தொடருக்கான அணி: டெம்பா பவுமா, கார்பின் போஷ், மாத்திவ் பிரீட்ஜி, டெவால்டு ப்ரீவிஸ், நந்த்ரே பர்கர், டோனி டி ஜார்ஜி, எய்டன் மார்க்ரம், செனுரன் முத்துசாமி, கேசவ் மகாராஜா, வியான் முல்டர், லுங்கி நெகிடி, லுகான் - ட்ரெ பிரிடோரியஸ், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பிரெனலன் சுப்ராயன்.

Proteas Men’s head coach Shukri Conrad has today announced full-strength squads for the upcoming white-ball tour against Australia, scheduled to take place next month.

ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்; மீதமிருப்பது சச்சின் மட்டும்தான்!

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட... மேலும் பார்க்க

மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 ... மேலும் பார்க்க

மான்செஸ்டர் டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, 332 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான நான்காவது ... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து ஜோ ரூட் சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று... மேலும் பார்க்க

சர்வதேச டி20 போட்டிகளில் நியூசிலாந்து வீரர் புதிய சாதனை!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்து வீரர் ஈஷ் சோதி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் மாற்றம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறது. முத்தரப்பு டி20 ... மேலும் பார்க்க