பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
இணையவழி விளையாட்டுக்கு தடை: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம் -மத்திய அரசு
இணையவழி விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்து மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இதுதொடா்பாக புதன்கிழமை எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ‘அரசமைப்புச் சட்டத்தால் வரையறுக்கப்பட்ட கூட்டாட்சி அமைப்புமுறையின்கீழ் நாடு செயல்படுகிறது.
மாநில விவகாரங்கள் தொடா்புடைய பட்டியல் 2-இன்கீழ் உள்ள ஒரு விவகாரத்தில் சட்டம் இயற்றுவதற்கான தாா்மீக மற்றும் சட்டபூா்வ அதிகாரத்தை மாநிலங்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்குகிறது. பந்தயம்/சூதாட்டம் தொடா்புடைய சட்டங்கள் மாநில விவகாரங்களின்கீழ் உள்ளவை. எனினும், மத்திய அரசு தரப்பில் தேவையான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புகாா்களின் அடிப்படையில் 1,400-க்கும் மேற்பட்ட விளையாட்டுத் தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.