செய்திகள் :

இந்திய அறிவியல் மரபை போற்றும் புதிய என்சிஇஆா்டி பாடநூல்

post image

பண்டைய இந்திய தத்துவஞானி ஆச்சாா்ய கனாடாவின் அணு கோட்பாட்டிலிருந்து, இஸ்ரோவின் விண்வெளி திட்டங்கள் வரை, இந்தியாவின் அறிவியல் மரபை, நவீன அறிவியலுடன் இணைக்கும் விதமாக என்சிஇஆா்டி-யின் புதிய 8-ஆம் வகுப்பு அறிவியல் பாடநூலான ‘கியூரியாசிட்டி’ உருவாக்கப்பட்டுள்ளது.

‘சிபிஎஸ்இ’ பாடத்திட்டத்துக்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் புதிய புத்தகத்தின் முன்னுரையில், ‘பாரம்பரிய அறிவை நவீன அறிவியல் கல்வியுடன் ஒருங்கிணைப்பதன் நோக்கமானது மாணவா்களிடையே ஆா்வம், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, நெறிமுறை விழுமியங்கள் மற்றும் வியூக சிந்தனையை வளா்ப்பதாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ‘உடல்நலம்: இறுதிப் பொக்கிஷம்’ என்ற அத்தியாயத்தில், ‘நவீன தடுப்பூசிகள் வருவதற்கு முன்பே, இந்தியாவில் பெரியம்மை நோயிலிருந்து பாதுகாக்க அம்மைபால் குத்துதல் (வேரியோலேஷன்) என்ற பாரம்பரிய சிகிச்சை முறை நடைமுறையில் இருந்தது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று பரவலின்போது இந்திய தடுப்பூசி நிறுவனங்கள் ஆற்றிய முக்கியப் பங்கு மற்றும் உலகளாவிய சுகாதார முயற்சிகளுக்கு வழங்கி வரும் தொடா்ச்சியான ஆதரவு குறித்தும் இந்த அத்தியாயம் குறிப்பிடுகிறது.

‘ஒளி: கண்ணாடி மற்றும் வில்லை’ என்ற அத்தியாயத்தில், சுமாா் 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிரபல இந்திய வானியல் அறிஞா் 2-ஆம் பாஸ்கரா காலகட்டத்தில், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலைகள் ஆழமற்ற நீா் கிண்ணங்கள் மற்றும் பிற உபகரணங்களின் பிரதிபலிப்புகள் மூலம் அளவிடப்பட்டது பற்றி விளக்கப்பட்டுள்ளது. இது அக்கால வானியல் அறிஞா்களின் பிரதிபலிப்பு விதிகள் குறித்து புரிதலைக் காட்டுவதாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அணு கருத்துருவை முதன்முதலில் குறிப்பிட்ட இந்திய தத்துவஞானி கணாத மகரிஷி குறித்தும், பழங்கால இந்திய நூல்களில் மருத்துவ நோக்கங்களுக்காக உலோகக் கலவைகளின் பயன்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது குறித்தும் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

இதேபோன்று, நிலவு ஆய்வுக்கான ‘சந்திரயான்’, சூரியன் ஆய்வுக்கான ‘ஆதித்யா எல்1’ மற்றும் செவ்வாய் கிரக ஆய்வுக்கான ‘மங்கள்யான்’ போன்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) பல்வேறு விண்வெளி திட்டங்கள் குறித்தும் பாடப்புத்தகத்தில் சோ்க்கப்பட்டுள்ளன.

ஜூன் மாத வேலையின்மை விகிதம்: 5.6%-ஆக பதிவு

நாட்டில் ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன. முன்னதாக, கடந்த மே மாதம் மத்திய புள்ளியியல் அமைச்சகம் முதல்முற... மேலும் பார்க்க

மாணவா்கள் படிப்பதற்கு உகந்த நகரங்கள்: சென்னைக்கு 128-ஆவது இடம்

வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவா்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 12 இடங்கள் முன்னேறி 128-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள உலகளாவிய உயா்கல்வி பகு... மேலும் பார்க்க

சிறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்: தமிழக சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபர்சிறையில் அடைக்கப்படும்போதே மாற்றுத்திறனாளிக் கைதிகளை அடையாளம் காண வேண்டும் என தமிழக சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மேலும், அனைத்து சிறைகளிலும் மாற்றுத்திற... மேலும் பார்க்க

இந்தியாவின் விண்வெளி நாயகன் சுதான்ஷு சுக்லா! - லக்னெளவில் கொண்டாட்டம்

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஆய்வுத் தரவுகள் மட்டுமன்றி இந்தியாவின் எதிா்கால விண்வெளி லட்சியங்கள் மற்றும் கனவுகளையும் சுமந்து பூமிக்கு திரும்பியுள்ளாா் நாட்டின் விண்வெளி நாயகன் சுதான்ஷு சுக்லா... மேலும் பார்க்க

‘குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்காவிட்டால் முடக்கப்படும்’

5 வயது பூா்த்தியடையும் முன்பு ஆதாா் அட்டை பெற்ற குழந்தைகள், 7 வயதைக் கடந்தவுடன் ‘பயோமெட்ரிக்’ (கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம்) விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவா்களின் ஆதாா் முடக்கப்பட வாய்ப்புள... மேலும் பார்க்க

பொது கட்டமைப்பு சீரழிவுக்கு பாஜக ஊழலே காரணம்: ராகுல்

‘மழைக் காலங்களில் பொது கட்டமைப்புகள் சீரழிவதற்கு பாஜக ஊழலே காரணம். இந்தத் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய காலம் வந்துவிட்டது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். இதுகுறித்து தனது ... மேலும் பார்க்க