இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி
இந்தியர்களை வேலைக்கு அமர்த்தும் நாள்கள் முடிவுக்கு வந்துவிட்டன: டிரம்ப் பேச்சு
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், சீனாவில் வணிக நிறுவனங்கள் அமைப்பதற்கும் இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் அமெரிக்காவுக்கும் அமெரிக்கர்களின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது மற்ற நாடுகளை கடுமையாக பாதித்து வருகிறது.
அந்தவகையில் புதன்கிழமை செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், நாட்டின் நலனுக்காக ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்துப் பேசினார். செயற்கை நுண்ணறிவு தொடர்பான மூன்று நிர்வாக உத்தரவுகளில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அப்போது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாடுகளில் குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதை கடுமையாக எதிர்த்துள்ளார்.
"நீண்ட காலமாக அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறையின் பெரும்பகுதி தீவிரமான உலகமயமாக்கலைப் பின்பற்றியது. இது லட்சக்கணக்கான அமெரிக்கர்களை நம்பிக்கையற்றவர்களாகவும் துரோகிகளாகவும் உணர வைத்தது.
அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல சீனாவில் தொழிற்சாலைகளை நிறுவி அவற்றில் இந்தியாவில் இருந்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி அமெரிக்காவின் சுதந்திரத்தை சீர்குலைத்துள்ளன என்று உங்களுக்குத் தெரியும். அதேநேரத்தில் அமெரிக்கர்களை பணிநீக்கம் செய்ததும் நடந்தது. அந்த நாள்கள் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன. அமெரிக்காவின் நலனுக்காக இந்த அணுகுமுறையை நோக்கி மாற வேண்டியுள்ளது.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாட்டில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றன. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகம் பேரை வேலைக்கு அமர்த்துகின்றனர். இந்த நிறுவனங்கள் இனி உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.