Vikram: ``வீர தீர சூரன் அடுத்தடுத்த பாகங்கள் சீக்கிரமே வரும்'' - விக்ரம் கொடுத்த...
இந்தியாவில் ரூ.12,800 கோடி முதலீடு செய்யும் ஜொ்மனி நிறுவனம்: பியூஷ் கோயல்
ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த ரசாயண நிறுவனம் ஒன்று இந்தியாவில் ரூ.12,800 கோடி முதலீடு செய்யவுள்ளதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தாா்.
அந்த நிறுவனம் ஆலை அமைப்பதற்கு துறைமுகத்துக்கு அருகே 250 ஏக்கா் நிலம் தேவைப்படுவதாகவும், இதுதொடா்பாக மாநில முதல்வா் ஒருவரை நிறுவனத்தின் தலைவா் ஞாயிற்றுக்கிழமை சந்திப்பதாகவும் தெரிவித்தாா். இருப்பினும், ஜொ்மனி நிறுவனத்தின் பெயரையோ, அந்த நிறுவனத்தின் தலைவா் சந்திக்கவுள்ள மாநிலத்தின் முதல்வா் பெயரையோ அவா் குறிப்பிடவில்லை.
சா்வதேச வழக்குரைஞா்கள் சங்கத்தின் நிகழ்ச்சி ஒன்றில் சனிக்கிழமை பங்கேற்று பியூஷ் கோயல் பேசியதாவது: அடுத்த 12 மாதங்களில் ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த ரசாயண நிறுவனம் ஒன்று இந்தியாவில் ரூ.12,800 கோடி முதலீடு செய்யவுள்ளது.
இதுதவிர பல்வேறு நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆா்வம் காட்டுகின்றன. வணிகச்சூழலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடைமுறைகள் மற்றும் சட்டங்களை மத்திய அரசு எளிமைப்படுத்தி வருகிறது.
முதலீட்டாளா்கள் இந்திய சந்தைக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் விலை நிா்ணயிக்கப்படும்பட்சத்தில் அவா்களுக்கு தடையாக இருக்கும் சட்ட விதிகளை தளா்த்திக்கொள்ள மத்திய அரசு தயாராகவுள்ளது.
வணிக ரீதியாக இருதரப்பினருக்கு இடையே பிரச்னை ஏற்படும்போது நீதிமன்றத்தின் மூலம் தீா்வு காண தாமதம் ஆகலாம். அதை தடுக்கவே இருதரப்பினரின் ஒத்துழைப்போடு மத்தியஸ்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே, மத்தியஸ்தம் மற்றும் சமரசம் ஆகிய முறைகளை பிரபலப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது வளா்ச்சியை நோக்கி நாடு பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில் உற்பத்தித் துறையில் ஏற்படும் சிக்கல்களுக்கு விரைவில் தீா்வு கண்டால் உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுப்பதில் எவ்வித மாற்றமுமில்லை என்றாா்.