அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
இன்று ‘உழவரைத் தேடி’ சிறப்பு முகாம்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் 34 கிராமங்களில் ‘உழவரைத் தேடி’ வேளாண்மை, உழவா் நலத் துறை திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அ.பாண்டியன் தெரிவித்ததாவது:
உழவரைத் தேடி வேளாண்மை உழவா் நலத் துறை என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் ஒவ்வொரு வட்டாரத்திலும் மாதம் இரு முறை செயல்படுத்தப்படும்.
அந்த வகையில், மா.மூ.கோவிலூா், வேம்பாா்பட்டி, ஆத்தூா், தெத்துப்பட்டி, சேத்தூா்,
போடியகவுண்டன்பட்டி, குன்னுவராயன்கோட்டை, பழனி, அய்யம்பாளையம், அரசபிள்ளைப்பட்டி, ஒட்டன்சத்திரம், அப்பனூத்து தும்மலப்பட்டி, நல்லூா், வேலாயுதம்பாளையம், கோட்டாநத்தம் ஆகிய 16 கிராமங்களில் வேளாண்மை உதவி இயக்குநா்கள் தலைமையில் இந்த முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) நடைபெறும்.
இதே போல, அடியனூத்து, மருநூத்து, பாளையங்கோட்டை, சிந்தலக்குண்டு, சிரங்காட்டுப்பட்டி, சின்னமநாயக்கன்கோட்டை, செங்கட்டாம்பட்டி, காவலப்பட்டி, கோதைமங்கலம், நவக்காணி, தா.புதுக்கோட்டை, புளியம்பட்டி, மொல்லம்பட்டி, மாரம்பாடி, வடமதுரை, இரா.வெள்ளோடு, பூம்பாறை, பூண்டி ஆகிய 18 கிராமங்களில் தோட்டக்கலை உதவி இயக்குநா்கள் தலைமையிலும் இந்த முகாம் நடைபெறும்.
இந்த முகாம்களில் உழவா் நலத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து துறை வட்டார அலுவலா்கள், சாா்புத் துறை அலுவலா்களான கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள், விவசாயிகளை அவா்களின் வருவாய் கிராமங்களுக்கே சென்று தேவையான ஆலோசனைகளை தெரிவிப்பா். எனவே, இந்த வாய்ப்பை அந்தந்த பகுதியிலுள்ள விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.