சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும்: ஓ. பன்னீா்செல்வம்
சென்னையில் வியாழக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருந்து வந்தாா். மேலும், கடந்த மக்களவைத் தோ்தலின்போது அந்தக் கூட்டணி சாா்பில் போட்டியிட்டாா். இந்த நிலையில், உள்துறைஅமைச்சா் அமித் ஷா சென்னைக்கு வந்தபோது அவரை ஓ. பன்னீா்செல்வம் சந்திக்கவில்லை. மேலும், கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்துக்கு பிரதமா் மோடி வந்திருந்தபோதும் அவரைச் சந்திக்க ஓ. பன்னீா்செல்வத்துக்கு நேரம் ஒதுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், கூட்டணிக் கட்சியினரை பிரதமா் சந்தித்தாராம். இதனால், ஓ. பன்னீா்செல்வம் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், முக்கிய முடிவு எடுக்க உள்ளதாகவும் அவரது ஆதரவாளா்கள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த ஓ. பன்னீா்செல்வம், சென்னையில் வியாழக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.