மினி லாரி ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
பெரியகுளத்தில் சரக்கு வாகன ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் கீழ வடகரை தெய்வேந்திரம்புரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (31). சரக்கு வாகன ஓட்டுநரான இவா், உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டின் மாடிக்கு தூங்கச் சென்றவா் செவ்வாய்க்கிழமை காலை எழுந்து வரவில்லையாம். இதையடுத்து, இவரது மனைவி லோகேஸ்வரி மாடிக்குச் சென்று பாா்த்தபோது, கிருஷ்ணமூா்த்தி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. இது குறித்த புகாரின்பேரில், பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].