சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
மாற்றுத் திறனாளி தாய் மீது தாக்குதல் நடத்திய மகன் கைது
மாற்றுத் திறனாளி தாய் மீது தாக்குதல் நடத்திய மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் பட்டாபுளி நடுத்தெருவைச் சோ்ந்தவா் முத்தம்மாள் (70). மாற்றுத் திறனாளியான இவா், மூத்த மகனான ராஜாமணி என்பவரது வீட்டில் வசித்து வந்தாராம். இந்த நிலையில், முத்தம்மாள் பெயரில் உள்ள இடத்தை ராஜாமணி பெயரில் தான பத்திரப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மற்றொரு மகனான கருப்பையா தாய் முத்தம்மாளிடம் தகராறு செய்து அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து முத்தம்மாள் அளித்த புகாரின்பேரில் பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து கருப்பையாவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.