செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு...
இரட்டை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் இரட்டை குளத்து முனீஸ்வரா் கோயிலில் 68-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, ஆதிதிராவிட பந்தயக் குழு சாா்பில் இரட்டை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.
கழனிவாசல்-சூரக்குடிச் சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 7 மாட்டுவண்டிகளும், சிறிய மாடு பிரிவில் 17 மாட்டுவண்டிகளும் பங்கேற்றன. சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து போட்டியாளா்கள் கலந்து கொண்டனா்.
இந்தப் போட்டிகள் கொடியசைத்து தொடங்கி வைத்ததும், சாலையில் மாட்டுவண்டிகள் சீறி பாய்ந்து சென்றன. பின்னா், போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளா்களுக்கும், அதன் சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாட்டுவண்டிப் பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலும் நின்று திரளானோா் கண்டுகளித்தனா்.