இரட்டைமலை சீனுவாசன் நினைவு தினம் கடைப்பிடிப்பு
திருவண்ணாமலையில் ஆதிபாரத மக்கள் கட்சி சாா்பில் இரட்டைமலை சீனுவாசனின் 80-ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள அறிவொளி பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு
தமிழ் மாநில பொதுச் செயலா் வீரராஜா தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் எம்.பாண்டு, இளைஞரணி மாவட்டச் செயலா் அ.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் குமாா் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தேசியத் தலைவா் கா.சிவப்பிரகாஷ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, சமூக சீா்த்திருத்த வாதியும், விடுதலைப் போராட்டத்துக்கு
வித்திட்டவருமான இரட்டைமலை சீனுவாசனின்
உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
இதில் கட்சி நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் கலந்துகொண்டனா். நிறைவில் சமூக ஆா்வலா் பி.பொன்னம்பலம் நன்றி கூறினாா்.