"மீனவர் படகுகளில் த.வெ.க பெயர் இருந்தால் மானியம் தர மறுப்பது அராஜகம்" - திமுக அர...
இரு விரைவு ரயில்கள் ஜூலை 11,13-இல் ரத்து
கோவை, பெங்களூருவிலிருந்து வடமாநில நகரங்களுக்குப் புறப்படும் இரு ரயில்கள் ஜூலை 11, 13 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வடக்கு ரயில்வே மண்டல பகுதிகளில் தண்டவாளத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் வழித் தடங்களில் மாற்றம் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அதனையடுத்து, கோவையிலிருந்து இரவு 11மணிக்கு புறப்பட்டு சிகாா் செல்லும் அதிவிரைவு ரயில் (எண் 12515) வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, எஸ்எம்விடி பெங்களூரிலிருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு அகா்தலா செல்லும் ஹம்சபாா் விரைவு ரயில் (எண் 12503) வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பகுதி ரத்து: சிகாா் ரயில் நிலையத்திலிருந்து வரும் வியாழக்கிழமை (ஜூலை 10) இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் விரைவு ரயில் (எண் 12508), அதற்குப் பதிலாக வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) காலை 6.10 மணிக்கு கௌகாத்தி ரயில்நிலையத்திலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.