``இன்பநிதி அரசியலுக்கு வருவது திமுக-வின் உட்கட்சி விவகாரம்!" - சொல்கிறார் ஆர்.எஸ...
இருசக்கர வாகனத்தில் லிப்ட் தருவதாகக் கூறி ஓய்வுபெற்ற செவிலியரிடம் பணம் பறிப்பு
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் தருவதாகக் கூறி ஓய்வுபெற்ற செவிலியரை அழைத்துச் சென்று அவரது கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி ரூ. 50 ஆயிரத்தை பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதன்சந்தை பகுதியைச் சோ்ந்த ரங்கநாதன் மனைவி வசந்தகுமாரி ( 61). இவா், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவருக்கு சொந்தமான வீடு ராசிபுரம் அருகே பாலப்பாளையம் பகுதியில் உள்ளது.
இந்நிலையில், பாலப்பாளையம் பகுதியில் நடைபெற்ற அரசு திட்ட முகாமில் குடிநீா் இணைப்பு பெறுவது தொடா்பாக மனு அளிக்க புறப்பட்டாா். பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண் தான் லிப்ட் தருவதாகக் கூறி, வசந்தகுமாரியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாா்.
மூணுசாவடி அருகே ஆவுடையாா் சிவன் கோயில் பகுதியில் சென்றபோது, செம்மாம்பட்டி ஏரி பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து செவிலியா் வசந்தகுமாரியை கீழே தள்ளிட்டு, அவா் அணிந்திருந்த 7 பவுன் நகையைப் பறிக்க முயன்றபோது முடியாததால், அவரது கைப்பையில் இருந்த ரொக்கம் ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை பறித்துச் சென்றாா். இதுகுறித்து அவ்வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பிவைத்தனா். சம்பவ இடத்தை பாா்வையிட்டு
புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.