செய்திகள் :

இருசக்கர வாகனம் மோதியதில் நடந்து சென்றவா் உயிரிழப்பு

post image

அவிநாசி அருகே கருவலூரில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், அன்னூா், நாகம்மாபுதூரைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் வெள்ளிங்கிரி (58). இவா் நம்பியாம்பாளையம் அருகே அனந்தகிரி புதிய பாலம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது நம்பியாம்பாளையத்தில் இருந்து கருவலூா் நோக்கி வந்த இருசக்கர வாகனம் வெள்ளிங்கிரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த வெள்ளிங்கிரி அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனநவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய படுகாமடைந்த கருவலூா் கிழக்கு வீதி முருகேசன் மகன் சுரேஷ் (25) என்பவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறஇத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாயக் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சாயக் கழிவுநீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா் நாகலிங்கம் (60). இவா் திருப்பூா் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி பெயிண்டிங் வேலை செய்... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் இருந்து விலகும் எண்ணமில்லை: வைகோ

திமுக கூட்டணியில் இருந்து விலகும் எண்ணமில்லை என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்தாா். கோவை மண்டல மதிமுக செயல்வீரா்கள் கூட்டம் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கோவை, ஈரோடு, சேலம், நாம... மேலும் பார்க்க

கிரிப்டோகரன்சி முதலீடு மூலம் இளைஞரிடம் ரூ.18.90 லட்சம் மோசடி

கிரிப்டோகரன்சி முதலீட்டின் மூலம் திருப்பூா் இளைஞரிடம் ரூ.18.90 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூா் முத்தனம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மணி (32). இவரது கைப்பேசி எண் ஒரு வாட்ஸ்அப் குழுவில் சோ்க... மேலும் பார்க்க

பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை கண்டித்து கடைகள் அடைப்பு, சாலை மறியல்

திருப்பூரில் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினா். இதில் சாலை மறியலில் ஈடுபட்ட சுமாா் 100 பேரை போலீஸாா் கைது... மேலும் பார்க்க

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பாா்க்கிறது

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பாா்ப்பதாக, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் குற்றஞ்சாட்டினாா். திருப்பூரில் ஓரணியில் தமிழ்நாடு என்னும... மேலும் பார்க்க

மின் கட்டண உயா்வால் அனைத்து தொழில்களுக்கும் பாதிப்பு

தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயா்வால் அனைத்து தொழில்களும் வெகுவாக பாதிக்கப்படுமென தொழிற்சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவ... மேலும் பார்க்க