செய்திகள் :

இறந்த தாயின் உடலை சைக்கிளில் எடுத்துச் சென்ற மகன்: மருத்துவமனை நிர்வாகத்துக்கு அன்புமணி கண்டனம்

post image

இறந்த தாயின் உடலை மிதிவண்டியில் மகன் எடுத்துச் சென்ற நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையின் மனிதநேயற்ற செயல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

திருநெல்வேலியில் உயிரிழந்த தாயாரின் உடலை அவரது மகன் 18 கிலோமீட்டர் தொலைவுக்கு மிதிவண்டியில் கட்டி எடுத்துச் சென்றதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த அவல நிலைக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தின் மனிதநேயமற்ற நடத்தை தான் காரணமாகும். மருத்துவமனை நிர்வாகத்தின் செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த வடக்கு மீனவன்குளத்தைச் சேர்ந்த சிவகாமியம்மாள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரது உயிரைக் காப்பாற்ற கடைசி வரை மருத்துவமனை முயன்றிருக்க வேண்டும். அந்த முயற்சி தோல்வியடைந்திருந்தாலும் கூட, அந்த மூதாட்டியின் உடலை மரியாதையுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திருக்க முடியும்.

ஆனால், அதை செய்யாத நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், உயிருக்கு கடுமையாக போராடிக் கொண்டிருந்த நிலையிலேயே சிவகாமியம்மாளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி அவரது மகன் பாலனிடம் கூறியது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும்.

மருத்துவமனையிலிருந்து சிவகாமியம்மாளை அழைத்துச் சென்ற சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்து விட்டதால், அடுத்து என்ன செய்வதென்று தெரியாத பாலன், தமது தாயாரின் உடலை மிதிவண்டியில் கட்டி எடுத்துச் சென்றுள்ளார். இப்படி ஒரு நிலை ஏற்படுவதை மருத்துவமனை நிர்வாகம் தவிர்த்திருக்க வேண்டும்.

இதையும் படிக்க | வேங்கைவயலில் பதற்றம்: போலீசார் குவிப்பு

சிவகாமியம்மாள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக அவரது மகன் பிடிவாதம் பிடித்ததால் தான், வேறு வழியின்றி அனுப்பி வைக்க நேரிட்டதாக மருத்துவக் கல்லூரி முதன்மையர் ரேவதி கூறியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழகத்தின் பெரும்பான்மையான அரசு மருத்துவமனைகளில் உயிரிழக்கும் நிலையில் இருப்பவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறி அனுப்பி வைப்பது வாடிக்கையாக உள்ளது. நோயாளிகளின் உறவினர்களே பிடிவாதம் பிடித்தாலும் மருத்துவமனை நிர்வாகம் அதை அனுமதிக்கக் கூடாது.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து எத்தகைய சூழலில் சிவகாமியம்மாள் அனுப்பப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் உயிரிழக்கும் நிலையில் உள்ளவர்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பதை தவிர்க்க வேண்டும். சிலர் ஆபத்தான நிலையில் உள்ளவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று உறவினர்கள் விரும்பினால், மருத்துவப் பணியாளர்களின் கண்காணிப்பில், உரிய வசதிகள் கொண்ட அவசர ஊர்தி வாயிலாக மட்டுமே அவர்கள் அனுப்பி வைக்கப்படுவதை மருத்துவமனை நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பிரபல மருத்துவர் கே.எம். செரியன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

புதுதில்லி: உலக புகழ்பெற்ற மருத்துவர்களில் ஒருவரான கே.எம்.செரியன் மறைவால் துயரம் அடைந்தேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.50 ஆண்டுகளுக்கும் மேலாக இதய மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் புக... மேலும் பார்க்க

டங்ஸ்டன் விவகாரத்தில் கிடைத்த வெற்றி நமக்கான வெற்றி: முதல்வர் ஸ்டாலின்

மதுரை: டங்ஸ்டன் விவகாரத்தில் கிடைத்த வெற்றி நமக்கான வெற்றி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்துக்குள்பட்ட 11 கிராமங்களை உள்ளடக்கி 5,500 ஏக்கா் பரப்பில் அரிட்டாபட்டி... மேலும் பார்க்க

மருத்துவர் கே.எம்.செரியன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: உலக புகழ்பெற்ற மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் சனிக்கிழமை(ஜன.25) நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட மருத்துவர் செர... மேலும் பார்க்க

தெலங்கானா: லாரியில் இருந்த கம்பிகள் கார், ஆட்டோ ரிக்‌ஷா மீது விழுந்ததில் 4 பேர் பலி

தெலங்கானா மாநிலம், வரங்கல் மாவட்டத்தில் லாரியில் இருந்த கம்பிகள் கார் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா மீது விழுந்ததில் கார், ஆட்டோவில் இருந்தவர்களில் 4 பேர் பலியாகினர், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்ததாக தகவல்... மேலும் பார்க்க

குறுகிய காலத்தில் நிறைவடையும் பிரபல தொடர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 3.30 மணிக்கு வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் திரவியம் ... மேலும் பார்க்க

பிரமிக்க வைத்த குடியரசு நாள் அலங்கார ஊர்தி!

குடியரசு நாளையொட்டி தில்லியில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊா்திகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.நாடு முழுவதும் குடியரசு நாள் விழா இன்று(ஜன. 26) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. குடியரச... மேலும் பார்க்க