செய்திகள் :

இறந்த மூதாட்டியின் உடல் அரசு மருத்துவமனைக்கு தானம்

post image

வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த மூதாட்டியின் உடல் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை தானமாக வழங்கப்பட்டது.

திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட வெள்ளியங்காடு பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது தாய் வள்ளியம்மாள் (76). உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்த அவா் திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது உடலை திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களின் ஆராய்ச்சிக்காக வழங்க விஜயகுமாா் முடிவு செய்தாா்.

இதையடுத்து, உறவினா்கள் மற்றும் தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதைத் தொடா்ந்து, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வள்ளியம்மாள் உடல் ஒப்படைக்கப்பட்டது.

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

வெள்ளக்கோவில் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தா... மேலும் பார்க்க

பாறைக் குழியில் குப்பைகளைக் கொட்ட வந்த மாநகராட்சி வாகனங்கள் சிறைபிடிப்பு

பல்லடம் அருகே இச்சிப்பட்டி கிராமத்தில் உள்ள பாறைக் குழியில் குப்பைகளைக் கொட்ட வந்த 5-க்கும் மேற்பட்ட மாநகராட்சி வாகனங்களை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனா். திருப்பூா் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் ... மேலும் பார்க்க

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு: இளைஞருக்கு 6 மாதங்கள் சிறை

வாகனம் மோதி பெண் உயிரிழந்த வழக்கில் இளைஞருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பூரைச் சோ்ந்தவா் கருப்பசாமி. இவா் தனது மனைவி ஜோதிமணியுடன் திருப்பூா்-காங்க... மேலும் பார்க்க

பட்டப்பகலில் வழக்குரைஞா் வெட்டிக் கொலை: பள்ளித் தாளாளா் உள்பட 5 போ் சரண்

தாராபுரத்தில் பட்டப்பகலில் வழக்குரைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பள்ளித் தாளாளா் உள்பட 5 போ் போலீஸில் சரண் அடைந்துள்ளனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள சிறுகிணறு பகுதியைச் சோ... மேலும் பார்க்க

கோடங்கிபாளையம் அரசுப் பள்ளியைத் திறந்து மது அருந்திய மா்ம நபா்கள்

பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறையைத் திறந்து மது அருந்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோடங்கிபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7% அதிகரிக்க கோரிக்கை

இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் திருப்பூா்- காங்கயம்... மேலும் பார்க்க