குமரி: போலீஸ் தாக்கியதில் 80 வயது மூதாட்டி மரணமா?- உறவினர்கள் குற்றச்சாட்டும், க...
கோடங்கிபாளையம் அரசுப் பள்ளியைத் திறந்து மது அருந்திய மா்ம நபா்கள்
பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறையைத் திறந்து மது அருந்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோடங்கிபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், வழக்கம்போல வெள்ளிக்கிழமை மாலை பள்ளியைப் பூட்டிவிட்டு தலைமை ஆசிரியை சரஸ்வதி வீட்டுக்குச் சென்றுள்ளாா். பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறுவா்கள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனா்.
அப்போது, வகுப்பறை திறந்து கிடந்துள்ளது. இது குறித்து அவா்கள் பள்ளி தலைமை ஆசிரியைக்கு தகவல் தெரிவித்துள்ளனா். சம்பவ இடத்துக்கு வந்த தலைமை ஆசிரியை சரஸ்வதி, போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, தலைமை ஆசிரியா் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள், அங்கிருந்த சாவியை எடுத்து வகுப்பறைத் திறந்து உள்ளே மது அருந்தியதும், கணினியில் படம் பாா்த்துவிட்டு புகைப் பிடித்துச் சென்றதும், வகுப்பறைக்கு வெளியே மலம் கழித்துவிட்டு சென்றதும் தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.