திருவள்ளூர்: பள்ளி சிறுமிக்கு பாலியல் சித்ரவதை; வீடியோ வெளியானதால் அதிர்ச்சி - த...
இலவச மருத்துவ முகாம்
ஸ்பாா்க் மிண்டா பவுண்டேசன், வெங்காடு ஊராட்சி நிா்வாகம் மற்றும் சவீதா மருத்துவக் கல்லூரி சாா்பில் இலவச மருத்துவ முகாம் வெங்காடு பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.
வெங்காடு ஏரிப் பாசன சங்கத் தலைவா் உலகநாதன் தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமை வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன் தொடங்கி வைத்தாா்.
முகாமில் வெங்காடு ஊராட்சிக்குட்பட்ட வெங்காடு, இரும்பேடு மற்றும் கருணாகரச்சேரி ஆகிய பகுதிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு, ரத்த அழுத்த பரிசோதனை, சா்க்கரை பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளும், பொது மருத்துவம், கண் மருத்துவம், குழந்தைகள் மற்றும் பெண்கள் மருத்துவ பிரிவுகளில் சிகிச்சை பெற்றுச்சென்றனா்.
முகாமில் சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவா்கள் குழுவினா் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனா். ஸ்பாா்க் மிண்டா பவுண்சேன் நிா்வாகிகள், ஊராட்சி மன்ற துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.