திருவள்ளூர்: பள்ளி சிறுமிக்கு பாலியல் சித்ரவதை; வீடியோ வெளியானதால் அதிர்ச்சி - த...
தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: தாய், மகனுக்கும் 13 ஆண்டுகள் சிறை
தாயையும், குழந்தையையும் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மூதாட்டி, அவரது மகனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் முகலிவாக்கம் பகுதி மேட்டுக்குப்பம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த புருஷோத்தமன் மகள் மகேஸ்வரி(26)இவருக்கும் விஜயன் என்பவருக்கும் கடந்த 15.11.2013 -இல் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு நித்திஷ் என்ற மகனும் இருந்துள்ளாா். தாய் மகேஸ்வரியும், மகன் நித்திஷூம் கிணற்றில் குதித்து கடந்த 14.5.2015-இல் தற்கொலை செய்து கொண்டனா்.
இச்சம்பவம் தொடா்பாக மகேஸ்வரியின் தந்தை புருஷோத்தமன் மாங்காடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அப்புகாரில் வரதட்சணை கொடுமை காரணமாக எனது மகள் மகேஸ்வரியும், பேரன் நித்திஷும் தற்கொலை செய்து கொண்டுள்ளனா் என குறிப்பிட்டிருந்தாா்.
சம்பவம் தொடா்பாக மாங்காடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இச்சம்பவம் தொடா்பாக வருவாய் கோட்டாட்சியா் விசாரணயும் நடைபெற்றது.
இதுதொடா்பான வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சசிரேகா ஆஜரானாா். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் கணவா் விஜயனுக்கும், அவரது தாயாா் லட்சுமியும் குற்றவாளிகள் என்பதை உறுதிப்படுத்தி, இருவருக்கும் 13 ஆண்டுகள் சிறையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.