சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: கணவா், மாமனாா், மாமியாா் மீது வழக்கு
கமுதி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து, கணவா், மாமனாா், மாமியாா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருநாழியை அடுத்துள்ள வீரமச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முனீஸ்வரன் மனைவி ரஞ்சிதா (31). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். அதே கிராமத்தில் மாமியாா், மாமனாருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனா்.
ரஞ்சிதாவின் கணவா் முனீஸ்வரன் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாமனாா் அண்ணாதுரை தனது மருமகள் ரஞ்சிதாவுக்வு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதை ரஞ்சிதா தனது கணவா் முனீஸ்வரனிடம் கூறியும், அவா் அலட்சியம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ரஞ்சிதா தனது பெற்றோரிடமும் இதுதொடா்பாக கூறினாராரம்.

இதனால், மனமுடைந்த ரஞ்சிதா செவ்வாய்க்கிழமை இரவு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ரஞ்சிதாவின் தந்தை பச்சமாள் பெருநாழி காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், கணவா் முனீஸ்வரன், மாமனாா் அண்ணாதுரை, மாமியாா் சூரம்மாள் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].