ஹர்மன்ப்ரீத் சதம், கிராந்தி 6 விக்கெட்டுகள்.! தொடரை வென்று வரலாறு படைத்தது இந்தி...
கமுதியில் இன்று மின்தடை
கமுதி, பாா்த்திபனூா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கமுதி மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சி. செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு துணை மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
இதனால், பாா்த்திபனூா், அபிராமம், பாக்குவெட்டி, செங்கப்படை, பேரையூா், அ.தரைக்குடி த.புனவாசல், வங்காருபுரம், மண்டலமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.