பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!
ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ. 1.14 கோடி
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை வருவாயாக ரூ. 1.14 கோடி கிடைத்ததாக இணைஆணையா் க. செல்லத்துரை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல்களைத் திறந்து காணிக்கைகளை எண்ணும் பணி அம்பாள் சந்நிதி முன்பாக உள்ள பழைய திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பக்தா்களின் காணிக்கையாக ஒரு கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 707 ரொக்கமும், தங்கம் 61 கிராமும், வெள்ளி 3.200 கிலோவும், 51 வெளிநாட்டுப் பணத்தாள்களும் கிடைத்தன.
காணிக்கை எண்ணும் பணியில் கோயில் உதவி ஆணையா் ரவீந்திரன், கண்காணிப்பாளா் முத்துச்சாமி, ஆய்வா் முருகானந்தம், மேலாளா் வெங்கடேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.