AI -பேச்சால் ஈர்க்கப்பட்டு, மனைவியிடம் விவாகரத்து கேட்ட 75 வயது முதியவர் - சீனாவ...
கடல் அட்டைகள் கடத்தியவா் கைது
தொண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் கடல் அட்டைகளை கடத்தியவரை வனத் துறையினா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினம் பகுதியில் வனத் துறையினா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 15 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், கடல் அட்டைகளைக் கடத்தியவா் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகேயுள்ள முத்துகுடாவைச் சோ்ந்த விஸ்வநாதன் (38) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத் துறையினா் கைது செய்தனா்.