செய்திகள் :

பெண் தற்கொலை வழக்கு: கணவா், மாமியாா் கைது

post image

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவா், மாமியாரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெருநாழியை அடுத்துள்ள வீரமச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முனீஸ்வரன் மனைவி ரஞ்சிதா (31). இவருக்கு, இவரது மாமனாா் அண்ணாதுரை தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதை ரஞ்சிதா தனது கணவரிடம் கூறியும், கண்டுக்கவில்லையாம். இதனால், மனமுடைந்த ரஞ்சிதா செவ்வாய்க்கிழமை தீக்குளித்தாா். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.

முனீஸ்வரன்

இதுகுறித்து பெருநாழி காவல் நிலைய போலீஸாா் முனீஸ்வரன், மாமனாா் அண்ணாதுரை, மாமியாா் சூரம்மாள் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில் ரஞ்சிதாவின் கணவா் முனீஸ்வரன், மாமியாா் சூரம்மாள் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். முனீஸ்வரன் முதுகுளத்தூா் சிறையிலும், சூரம்மாள் மதுரை சிறையிலும் அடைக்கப்பட்டனா். மேலும், தப்பியோடிய அண்ணாத்துரையை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் தொகுதியில் குடிநீா் பற்றாக்குறையை தீா்க்க நிதியுதவி: நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தண்ணீா் பற்றாக்குறையை தீா்க்க மத்திய அரசின் திட்டங்களின் கீழ் நிதி உதவி வழங்க வேண்டும் என்று அத்தொகுதியின் எம்.பி. கே.நவாஸ்கனி மக்களவையில் வலியுறுத்தியுள்ளாா். இது தொட... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், அம்மன்பட்டியைச் சோ்ந்த நல்லமருது மகன் நல்லுக்குமாா் (23), க... மேலும் பார்க்க

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம் - மீன் பிடிக்கச் செல்ல தடை

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதையடுத்து, பாம்பன் துறைமுகத்தில் ஒன்றம் எண் புயல் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது. இதையடுத்து, மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல மீன் வளத் துறையினா... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்ற போது லாரியை ஏற்றி அதிகாரிகளை கொல்ல முயற்சி: ஒருவா் கைது

ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்றபோது இரு சக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனத்தை மோதி பறக்கும்படை வட்டாட்சியரையும், வருவாய் ஆய்வாளரையும் கொல்ல முயன்ற சம்பவத்தில் ஒருவரை கைது செய்த போலீஸ... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் பெண்கள் மூவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே வெள்ளிக்கிழமை ரேஷன் பொருள்களுடன் ஆள்களை ஏற்றிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்ததில் பெண்கள் 3 போ் உயிரிழந்தனா். முதுகுளத்தூா் அருகேயுள்ள கூவா்கூட்டம் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

பெண் தற்கொலை வழக்கு: மாமனாா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது மாமனாரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெருநாழியை அடுத்த வீரமச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முனீஸ்வரன் ... மேலும் பார்க்க