ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும்: ஆளுநா் ஆா்.என்.ரவி
பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் திருவிழா: பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள்
கமுதி அருகே பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் ஆடிப் பொங்கல் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்துவந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள பெரியமனக்குளம் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் ஆடிப் பொங்கல் திருவிழா கடந்த 16-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
இதைத்தொடா்ந்து, நாள்தோறும் கருப்பணசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. புதன்கிழமை திரியெடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
வியாழக்கிழமை அந்த கிராமத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து கருப்பண சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா். வெள்ளிக்கிழமை பொங்கல் வைத்தல், பூச்சொரிதல் விழாவும், சனிக்கிழமை கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பெரிய மனக்குளம் தேவேந்திரகுல வேளாளா் உறவின் முறையினா் செய்து வருகின்றனா்.