``நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' - மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்...
இளம்பெண் கொலை வழக்கு: கூலிப்படையைச் சோ்ந்த இருவா் உள்பட 4 போ் கைது
சாயல்குடி அருகே இளம்பெண் கொலை வழக்கில் ஏற்கெனவே கணவா் கைது செய்யப்பட்ட நிலையில், மாமனாா், கூலிப்படையைச் சோ்ந்த இருவா் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்துள்ள நரிப்பையூா் வெட்டுக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகோபால். உத்தரகாண்ட் மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து வந்தாா். இவா் ஜொ்மின் (36) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தாா். இந்தத் தம்பதிக்கு 14 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக ஜொ்மின் கடந்த 5 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தாா்.
இந்த நிலையில் ஜொ்மின் தனது பிள்ளைகளுடன் கடந்த 17-ஆம் தேதி இரவு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அங்கு முகத்தை துணியால் மூடியவாறு இருவா் வீட்டுக்குள் திடீரென வந்தனா். அவா்கள் அரிவாளால் ஜொ்மினை வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பினா்.
இதுகுறித்து ஜொ்மினின் பெற்றோா் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷிடம் அளித்த புகாரில், ஜொ்மினை அவரது கணவா் விஜயகோபால் கூலிப்படை வைத்து கொலை செய்ததாக புகாா் அளித்தனா்.
இதைத்தொடா்ந்து, உத்தரகாண்டில் பணியிலிருந்த விஜயகோபாலை வரவழைத்து சாயல்குடி போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது அவா் கூலிப்படை வைத்து மனைவியைக் கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து விஜயகோபாலை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், இந்தக் கொலையில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக விஜயகோபாலின் தந்தை வயக்கன் (65), கன்னிராஜபுரத்தைச் சோ்ந்த மாரியப்பன், தூத்துக்குடி கூலிப்படையைச் சோ்ந்த அசோக் (எ) அரவிந்த், காளிராஜ் (எ) கட்டக்காளி ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.