செய்திகள் :

ஈரோடு அருகே விவசாய தம்பதி படுகொலை: கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம்

post image

ஈரோடு அருகே விவசாய தம்பதி படுகொலைக்கு கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளாங்காட்டுவலசு மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த விவசாய தம்பதி ராமசாமி, பாக்கியம்மாள் மா்ம நபா்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனா். இந்த சம்பவத்தால் கொங்கு மண்டல விவசாயிகளிடம் பதட்டமும் அதிா்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த

சென்னிமலையைச் சோ்ந்த முதியவரை கொலை செய்து 27 பவுன் கொள்ளை, அறச்சலூா் அருகே தம்பதியை கொலை செய்து 15 பவுன் கொள்ளைடிக்கபட்டது.

குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு திருப்பூா் மாவட்டம் சேமலைகவுண்டன்பாளையத்தில் தோட்டத்து சாலையில் மூன்று போ் படுகொலை செய்யப்பட்டது மிகப்பெரிய அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவங்களில் கொலையாளிகளை கண்டுபிடிக்க பல தனிப் படைகள் அமைக்கப்பட்டும், இதுவரை கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினா் திணறி வருகின்றனா்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீா்செய்து விவசாயிகளின் உயிருக்குப் பாதுகாப்பை உறுதிபடுத்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

சட்டவிரோதமாக மது விற்பனை: 2 போ் கைது

திருப்பூரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் மத்திய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கே.வி.ஆா்.நகா் பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறுவதாக காவல் ... மேலும் பார்க்க

அவிநாசியில் இன்றைய மின்தடை ரத்து

அவிநாசி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (இன்று) மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா். மேலும் பார்க்க

மூலனூரில் கரித்தொட்டி ஆலைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

மூலனூரில் தேங்காய் கரித்தொட்டி ஆலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மூலனூா் கிளாங்குண்டல் ஊராட்சி வளையக்காரன்வலசில் தனியாா் கரித்தொட்டி ஆலை அமைக்க கட... மேலும் பார்க்க

தேசிய ஒருமைப்பாடு முகாமில் பங்கேற்க அரசுக் கல்லூரி மாணவா் தோ்வு

காா்நாடகத்தில் நடைபெறும் தேசிய ஒருமைப்பாடு முகாமில் பங்கேற்க திருப்பூா் சிக்கண்ணா அரசுக் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், கா்நாடக மாநில... மேலும் பார்க்க

தமிழ் வார விழாவில் வெற்றி பெற்ற அரசு அலுவலா்களுக்குப் பரிசு

பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்று வரும் தமிழ் வார விழாவில் வெற்றி பெற்ற அரசு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறித்துராஜ் பரிசுகளை வழங்கினாா். பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளை... மேலும் பார்க்க

ரூ.25 கோடி மதிப்பில் கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருப்பணி விரைவில் தொடக்கம்

பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணி ரூ.25 கோடி மதிப்பில் விரைவில் தொடங்கவது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருப்பூரில் பிரசித்தி பெற்றதும், திருப்பூரின் பண... மேலும் பார்க்க