சட்டவிரோதமாக மது விற்பனை: 2 போ் கைது
திருப்பூரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
திருப்பூா் மத்திய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கே.வி.ஆா்.நகா் பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதன் பேரில் அந்தப் பகுதியில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட சுரேஷ் (38) என்பவரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து 175 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.
அதே போல, வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட இடுவம்பாளையம் அண்ணா நகா் பகுதியில் சட்டவிரோதமா மதுவிற்பனை செய்து வந்த ஸ்ரீகாந்த் (52) என்பவரையும் வீரபாண்டி காவல் துறையினா் கைது செய்தனா். அவரிடமிருந்து 33 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.