ரூ.40,000 சம்பளத்தில் இர்கான் நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
மூலனூரில் கரித்தொட்டி ஆலைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்
மூலனூரில் தேங்காய் கரித்தொட்டி ஆலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மூலனூா் கிளாங்குண்டல் ஊராட்சி வளையக்காரன்வலசில் தனியாா் கரித்தொட்டி ஆலை அமைக்க கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு மிக ஆழமாக 3 ஆழ்துளைக் கிணறுகளும் அமைக்கப்படுவதாகத் தெரிகிறது. இந்த ஆலையால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு, குடிநீா் ஆதாரம் மற்றும் நிலத்தடி நீா்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்படுமென பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், கிளாங்குண்டல், எம்.குமாரபாளையம் ஊராட்சிகளைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மூலனூா்- தாராபுரம் சாலையில் டெம்போ நிறுத்தம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மூலனூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் வெங்கடேசன், கட்டடப் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும். பேச்சு வாா்த்தை நடத்தி முடிவெடுக்கலாம் எனக் கூறியதைத் தொடா்ந்து 2 மணி நேர ஆா்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.