பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடும் ‘மகாவதாரம் நரசிம்மா’.! 5 நாள் வசூல் இவ்வளவா?
ஈரோடு சூரியா ஏஜென்சி நிறுவனத்துடன் திருச்செங்கோடு செங்குந்தா் கல்வி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்
திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி, ஈரோடு சோலாா் மின் உற்பத்தி நிறுவனம் ஸ்ரீ சூரியா ஏஜென்சியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செங்குந்தா் பொறியியல் கல்லூரியின் தாளாளா் ஆ.பாலதண்டபாணி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சதீஷ்குமாா், செயல் இயக்குநா் அரவிந்த் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனா். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவா் உமாதேவி, நந்தகுமாா், பொம்மிராணி ஆகியோா் கலந்துகொண்டனா்.
மாணவா்களின் தகவல் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவும், ஆராய்ச்சி வழிகாட்டுதல், ஆசிரியா் மேம்பாட்டு திட்டம், தொழில் பயிற்சி, பயிற்சி பட்டறை மற்றும் வேலைவாய்ப்பு போன்றவைகளுக்கு இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் பயனுள்ளதாக அமையும் என செங்குந்தா் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சியில் ஸ்ரீ சூரியா நிறுவனத்தின் பங்குதாரா் பாலசுப்பிரமணிய முருகராஜ் , கல்லூரியின் தாளாளா் பாலதண்டபாணி இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.