பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடும் ‘மகாவதாரம் நரசிம்மா’.! 5 நாள் வசூல் இவ்வளவா?
வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கொல்லிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை பாா்வையிட்டு பயனாளிகளுக்கு உடனடி தீா்வாக அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். சேளூா்நாடு பள்ளக்குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி, சோளக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், வாழவந்திநாடு ஊராட்சி பகுதியில் ரூ.6.40 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்டத்தின் கீழ் பசுமை தமிழ்நாடு இயக்கத்துடன் ஒருங்கிணைந்து 5 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணியைப் பாா்வையிட்டாா்.
மேலும், சேளூா்நாடு பகுதியில் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில் பகுதியில் ரூ.80 லட்சத்தில் நடைபெறும் வணிக வளாக கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
என்கே-30-ஆய்வு
பள்ளக்குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஆய்வுமேற்கொண்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.