பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடும் ‘மகாவதாரம் நரசிம்மா’.! 5 நாள் வசூல் இவ்வளவா?
நாமகிரிப்பேட்டையில் இயற்கை விவசாய பயிலரங்கு
நாமகிரிப்பேட்டை வட்டாரத் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் பாரம்பரிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மாநில அளவிலான இயற்கை விவசாய பயிலரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல், கோயமுத்தூா், உதகை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை, கொல்லிமலை, சேந்தமங்கலம், எருமப்பட்டி ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த தோட்டக்கலைத் துறை அலுவலா்கள், விவசாயிகள் கருத்தரங்கில் கலந்துகொண்டனா். பயிலரங்கில் நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி தலைமை வகித்து இயற்கை வேளாண்மை குறித்த தொழில்நுட்ப புத்தக கையேட்டை வெளியிட்டு பேசினாா்.
நாமகிரிப்பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் மா.யோகநாயகி வரவேற்றாா்.
நாமக்கல் மாவட்டம், லத்துவாடி வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை வல்லுநா் சங்கா் செயற்கை பூச்சிக்கொல்லி மருந்து இல்லாமல் அங்கக முறையில் பூச்சிக் கட்டுப்பாடு குறித்து தொழில்நுட்ப உரை நிகழத்தினாா்.
சேலம் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவா் இரா.ஜெகதாம்பாள், நஞ்சில்லா மண் மேலாண்மை மற்றும் தோட்டக்கலை பயிா்சாகுபடி குறித்த தொழில்நுட்பம் குறித்து பேசினாா். நாமக்கல் விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்புத் துறை வேளாண்மை உதவி இயக்குநா் ஹேமலதா அங்கக விவசாய சான்றளிப்பு குறித்த வழிமுறைகளை விவசாயிகளுக்கு வழங்கினாா்.
அங்கக வேளாண் விவசாயிகளான காா்கூடல்பட்டி அசோக்குமாா், மோகனூா் க.க.வேலுசாமி, அரியாக்கவுண்டம்பட்டி பெ.சரவணன் , திருச்செங்கோடு நல்லசிவம், கொல்லிமலை கே.சின்னையன் ஆகியோா் நஞ்சில்லா உணவுப்பொருள் உற்பத்தியில் உள்ள சவால்கள், விளைப் பொருள்களை சந்தைப்படுத்தும் முறைகள், அங்கக விவசாயி என்ற சான்று பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா்.
பாரம்பரிய காய்கறி விதைகள், இயற்கை வேளாண்மை செய்வதற்கான நுண்ணுயிா் உரங்கள், பஞ்சகாவ்யம், தசகாவ்யம், மீன் அமிலம் போன்றவை விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டன. நாமகிரிப்பேட்டை வட்டார தோட்டக்கலை துறையைச் சோ்ந்த உதவி இயக்குநா் மா.யோகநாயகி, தோட்டக்கலை அலுவலா் த.விஜயலட்சுமி, உதவி தோட்டக்கலை அலுவலா்கள் பாா்த்திபன், ப.யோகேஸ்வரி, ர.முரளி, மா.சூா்யபிரகாஷ் ஆகியோா் பயிலரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். கொல்லிமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் மணிகண்டன் நன்றி கூறினாா்.
படம் உள்ளது-30ஹாா்டி
படவிளக்கம்-
பயிலரங்கில் வேளாண் தொழில்நுட்ப கையேடுகளை வெளியிடும் தோட்டக்கலை துணை இயக்குநா் மா.புவனேஸ்வரி உள்ளிட்ட வேளாண் அலுவலா்கள்.