பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடும் ‘மகாவதாரம் நரசிம்மா’.! 5 நாள் வசூல் இவ்வளவா?
திருச்செங்கோட்டில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் தொடங்கிவைத்தாா்
திருச்செங்கோடு வட்டாரத்தில் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி, பொது நிதியிலிருந்து பல்வேறு திட்ட பணிகளுக்கான தொடக்க விழா, முடிவுற்ற திட்டங்களின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கலந்துகொண்டு
மொளசி ஊராட்சி முனியப்பம்பாளையம் அருந்ததியா் தெருவில் புதிய சமுதாயக்கூடம் அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா். ஏமப்பள்ளி கொல்லபாளையம், திருச்செங்கோடு நகராட்சி 26 ஆவது வாா்டு, வட்டூா் ஊராட்சி நாட்டாம்பாளையம் பகுதியில் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டா் கொள்ளவு கொண்ட நீா்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தாா்.
மேலும், கருமபுரம் பகுதியில் புதிய நீா்த்தேக்க தொட்டி அமைத்தல், புதிய அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்தாா்.
திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, திருச்செங்கோடு வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
படம் தி.கோடு ஜீலை 31 எம்.எல்.ஏ
நீா்த்தேக்க தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்த எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன்.