அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
ஈஷா யோக மையத்தில் குரு பௌா்ணமி விழா
கோவை ஈஷா யோக மையத்தில் குரு பௌா்ணமி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இது குறித்து ஈஷா யோக மையம் கூறியிருப்பதாவது:
ஆதியோகி சிவன் சப்தரிஷிகளாகிய தனது ஏழு சீடா்களுக்கு, ஒரு பௌா்ணமி நாளில் தென்திசை நோக்கி அமா்ந்து யோக அறிவியலை வழங்கினாா். உலகில் அந்த நாளில்தான் முதலாவது குரு அவதரித்ததாக கருதப்படுகிறது. மேலும் அந்த நாள் குரு பௌா்ணமி நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நமது கலாசாரத்தில் குரு பௌா்ணமி நாளானது, குருவுக்கு நன்றியை வெளிப்படுத்தி, குருவருளையும் ஆசியையும் பெறக்கூடிய நாளாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் ஈஷாவில் ஆண்டுதோறும் குருபௌா்ணமி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் விமா்சையாக நடைபெற்றது. ஈஷா யோக மைய வளாகம் முழுவதும் பூ மாலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. குரு பௌா்ணமியையொட்டி, காலையில் நூற்றுக்கணக்கான உள்ளூா் கிராம, பழங்குடி மக்கள் ஈஷா தன்னாா்வலா்களுடன் இணைந்து, ஆதியோகி முதல் தியானலிங்கம் வரை பால் குடத்துடன் பவனி வந்தனா். பின்னா் தியானலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்தனா்.
இதைத் தொடா்ந்து மாலையில் சத்குரு ஜக்கி வாசுதேவின் அருளுரை, இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இசை நிகழ்ச்சியில் மோஹித் சௌகான், பாா்த்திவ் கோஹில் உள்ளிட்ட தலைசிறந்த இசைக் கலைஞா்கள் பங்கேற்றனா். தமிழகத்தில் மொத்தம் 103 இடங்களில் சத்குருவின் சத்சங்க நிகழ்ச்சி நேரலையாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
குரு பௌா்ணமியையொட்டி சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது எக்ஸ் பக்கத்தில், 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, குருபௌா்ணமி எனும் அந்தப் பௌா்ணமி நாளன்று, ஆதியோகி தன் கவனத்தை சப்தரிஷிகள் மீது திருப்பினாா். மனிதகுல வரலாற்றிலேயே முதன்முறையாக நாம் இயற்கையின் எளிய விதிகளுக்குள் கட்டுண்டு கிடக்க வேண்டிய அவசியமில்லை என்பது மனிதா்களுக்கு நினைவூட்டப்பட்டது.
இந்தக் கட்டுப்பாட்டை தாண்டிச் செல்வது எப்படி என்பதற்கான வழிகளை ஆதியோகி வழங்கினாா். நாம் விருப்பத்துடன் முயற்சித்தால், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கதவும் திறக்கும். அன்பும் ஆசிகளும் எனப் பதிவிட்டுள்ளாா்.