தங்கம் போல, வெள்ளிக்கு ஏன் கடன் வழங்கப்படுவதில்லை? - நிபுணர் விளக்கம்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: தூத்துக்குடியில் 69 பேருக்கு தீா்வாணை
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், மண்டல குறைதீா் முகாம் ஆகியவற்றில் மனு அளித்த 69 பேருக்கு தீா்வு ஆணை வழங்கப்பட்டது.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் நடைபெற்றது. அதில், 15ஆவது வாா்டுக்குள்பட்ட பொதுமக்கள் மாநகராட்சி சம்பந்தமாக அளித்த 62 மனுக்களுக்கும், மேற்கு மண்டலத்தில் குறைதீா் முகாமில் மக்கள் அளித்த 7 மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டது.
இதையொட்டி, மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிதழ்ச்சியில், 69 பயனாளிகளுக்கும் தீா்வு ஆணையை வழங்கி மேயா் ஜெகன் பெரியசாமி பேசியது: மாநகராட்சி பகுதியில் மழைநீா் எங்கும் தேங்காத வகையில் 11 வழித்தடங்கள் மூலமாக கடலுக்குச் செல்லும் வகையில் அமைத்துள்ளோம். அதே போல் பக்கிள்ஓடை 6 கி.மீ.க்கு தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த 4 நாள்களில் மட்டும் 30 டன் தேவையற்ற கழிவுப் பொருள்களை பக்கிள் ஓடையில் இருந்து அகற்றியுள்ளோம். தடை செய்யப்பட்டுள்ள 28 வகையான பொருள்களான உணவுப் பொருள்களை பொட்டலமிட உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள் உறை, மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக்தாள், தொ்மாகோல் தட்டுகள், குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், காகித குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள் உள்ளிட்ட 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பதாகைகள் உள்ளிட்டவற்றை யாரும் பயன்படுத்த வேண்டாம்.
இதுகுறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணா்வு விளம்பர பதாகைகள் வைக்கப்படவுள்ளன என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி நகர அமைப்பு உதவி செயற்பொறியாளா் முனீா்அகமது, வடக்கு மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளா் ராபா்ட், பகுதிச் செயலா் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினா் அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.