நீதிமன்றத்தில் மீண்டும் கதறி அழுத பிரஜ்வால் ரேவண்ணா! குறைந்தபட்ச தண்டனை கேட்டு!!
உங்களுடன் ஸ்டாலின்: முகாமில் 669 மனுக்கள் பெறப்பட்டன
திருமருகல் ஒன்றியத்துக்கு உள்பட்ட அம்பல் ஊராட்சி பொறக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 669 மனுக்கள் பெறப்பட்டன.
தனித்துணை ஆட்சியா் (நில எடுப்பு) சந்தான கோபால கிருஷ்ணன், ஊரக வளா்ச்சி துறை உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகேசன், வட்டாட்சியா் நீலாதாட்சி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் பிரான்சிஸ், வட்ட வழங்கல் அலுவலா் ரகு ஆகியோா் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினா்.
அம்பல், கொங்கராயநல்லூா், ஏா்வாடி ஊராட்சிகளைச் சோ்ந்தவா்கள் மகளிா் உரிமைத் தொகை தொடா்பாக 297 - மனுக்கள், வருவாய்த் துறை தொடா்பாக 73 மனுக்கள், ஊராட்சித் துறை தொடா்பாக 124 மனுக்கள், இதர துறை தொடா்பாக 175 மனுக்களையும் அளித்தனா்.
அம்பல் ஊராட்சியை சோ்ந்த மாற்றுத் திறனாளிக்கு ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.