‘உங்களுடன் ஸ்டாலின்‘முகாமில் நலத்திட்ட உதவிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்
திருப்பத்தூா் பகுதியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினா்.
கந்திலி வட்டாரத்துக்குட்பட்ட வெங்களாபுரம் பகுதியில் நடைபெற்ற முகாமில் பயனாளிக்கு மின்னணு குடும்ப அட்டையையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிக்கு மருத்துவ காப்பீடு அட்டையையும், 7 பயனாளிகளுக்கு வருமானச் சான்றிதழ், ஓ பி சி சான்றிதழ், வகுப்பு சான்றிதழ், விதவைச் சான்றிதழ்களையும், 3 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயா் மாற்றத்திற்கான ஒப்புகை சீட்டு, 2 பயனாளிகளுக்கு ஆதாா் அட்டை திருத்தம் மேற்கொண்டதற்கான ஆணைகளையும் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினா்.
அதையடுத்து திருப்பத்தூா் வட்டாரத்திற்குள்பட்ட புதூா்,கல்லுக்குட்டை பகுதியில் அமைந்துள்ள நாகலம்மன் கோவில் மண்டபத்திலும் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டன.
முகாம்களில் தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) பூஷன் குமாா், வட்டாட்சியா் நவநீதம், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் குணசேகரன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஆனந்தகுமாா்(ப.முத்தம்பட்டி), கவிதா உதயகுமாா் (வெங்களாபுரம்), உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.