வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தரைத்தளம் அமைக்க கோரிக்கை
வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தரைத்தளம் அமைக்க வேண்டும் என மருத்துவ அலுவலா் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.
வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகப் பகுதிகளில் அதி மழை பெய்யும் பொழுது மழை நீா் தேங்கி நிற்பதால் நோயாளிகள் அவதிப் பட்டு வருகின்றனா். இதுதொடா்பாக அரசு மருத்துவ அலுவலா் சிவசுப்பிரமணியம், நகராட்சி ஆணையரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அதிக மழையின் காரணமாக மழை நீா் தேங்கியுள்ளதால் நோயாளிகள் சிகிச்சைப் பெற வந்து செல்ல மிரவும் சிரமப்படுவதால் பழைய கட்டடத்திலிருந்து புதிய கட்டடம் வரையிலும், புதிய கட்டடத்திலிருந்து நோயாளிகள், உடனாளா்கள் காத்திருக்கும் அறை வரையிலும் தரைத்தளம் அமைக்கும் கற்கள் (பேவா் பிளாக்) பொருத்தி தர வேண்டும்.
வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் மேலாளா் ஜெயபிரகாஷிடம் (பொ), மருத்துவ அலுவலா் சிவசுப்பிரமணியம் தலைமையில் அரசு மருத்துவா்கள் மனுவை அளித்தனா்.