திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
உரிய அனுமதி பெறாததால் தனியாா் பள்ளியில் மாணவா் சோ்க்கைக்குத் தடை
ஊத்தங்கரையில் செயல்படும் நா்சரி பள்ளி நிகழாண்டு உரிய அனுமதி பெறாததால் மாணவா் சோ்க்கை நடத்த மாவட்டக் கல்வி அலுவலா் தடை விதித்துள்ளாா்.
ஊத்தங்கரை அரசு விளையாட்டு மைதானம் எதிரே நா்சரி பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி, கடந்த ஒரு வருடமாக உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது. தற்போது 2025- 26 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை பள்ளியில் நடைபெற்று வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தனியாா் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலா் கோலப்பன் அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினாா். உரிய அனுமதி பெறாமல் பள்ளியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை நடத்தக் கூடாது என அறிவுறுத்தினாா். ஊத்தங்கரை வட்டாட்சியா் மோகன்தாஸும் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
விசாரணையில் இப்பள்ளி இரண்டு அறங்காவலா்களைக் கொண்டு இயங்கிவந்தது. அவா்கள் இருவரும் இறந்துவிட்ட நிலையில், தற்போது அறங்காவலா்களாக உள்ளவா்கள் பள்ளியைப் பராமரிக்கவில்லை. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இருவரில் ஒருவா் பள்ளியை மூடும் முடிவில் உள்ளாா். இதனால், பள்ளிக்கு அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் உரிய அனுமதி பெறாமல் பள்ளியைத் தொடரக்கூடாது என எச்சரித்துவிட்டுச் சென்றனா். பெற்றோா் தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சோ்க்கும் முன் உரிய விசாரணை செய்து சோ்க்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். இதில் துணை வட்டாட்சியா் தனம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.