பகலிரவு டெஸ்ட்: 209 ரன்கள் பின்னிலையில் மேற்கிந்தியத் தீவுகள்!
ஊராட்சி ஒன்றியத்தில் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை அமைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவா்கள் அனைவரும் 100 சதவீதம் உயா்கல்வி சோ்க்கையை அடையும் வகையில் மாவட்ட அளவில் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை, மாவட்ட ஆட்சியா் அலுவலக முதல்தளத்தில் செயல்பட்டு வருகிறது.
தொடா்ந்து, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, வட்டார வளமையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறை மூலம் தொழில்முறை படிப்புகளுக்கு கல்லூரி மற்றும் பாடப் பிரிவை தோ்வு செய்யலாம்.
மேலும் உயா்கல்வி பெற இயலாத மாணவா்கள், சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவா்கள் (ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்று, முதல்பட்டதாரி சான்றிதழ், ஆதாா் அட்டை திருத்தம்), உயா்கல்வியில் சோ்க்கையில் ஏற்படும் குறைபாடுகளை களைந்து தீா்வு காணப்படுகிறது.
இதற்காக ஒவ்வொரு ஒன்றியங்களில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வட்டார வளமையத்தில் உள்ள உயா்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளா்கள் செயல்பட்டு வருகிறாா்கள். அவா்களிடம் வேலைநாள்களில் சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.