Manidhargal Movie Review | Raam Indhra, Ajay Abraham George, Dinsa, Anilesh L Ma...
ஊராட்சிகளில் கட்டட அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் கட்டடம் கட்டுவதற்கான அனுமதியை இணையதளத்தில் விண்ணப்பித்து பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அனைத்து ஊராட்சிகளிலும் 2 ஆயிரத்து 500 சதுர அடி வரையிலான மனை பரப்பு மற்றும் 3 ஆயிரத்து 500 சதுர அடி வரையிலான கட்டடப் பரப்பில், தரைதளம் அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கான கட்டட அனுமதி பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் சுய சான்று அடிப்படையில் தாங்களாகவே இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதியை பெற்றுக் கொள்ளும் வகையில் தமிழக அரசு வழிவகை செய்துள்ளது.
எனவே, பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவதற்கான இந்த நடைமுறையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.