ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்: ``ரூ2000 கோடி வங்கி மோசடி'' - அனில் அம்பானி மீது வழக்க...
எச்ஐவி- எய்ட்ஸ் விழிப்புணா்வு மனிதச்சங்கிலி
புதுக்கோட்டை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சாா்பில் எச்ஐவி- எய்ட்ஸ் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சிப் பூங்கா பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து, மனிதச்சங்கிலியில் கைகோத்து நின்றாா்.
தொடா்ந்து ஆட்டோக்களில் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி விழிப்புணா்வு பயணத்தைத் தொடங்கி வைத்தாா்.
தீவிர விழிப்புணா்வுப் பிரசாரத்தில் மாவட்டம் முழுவதும் கிராமங்கள் தோறும் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகளும், மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு போட்டிகளும் நடத்தப்படவுள்ளதாக அவா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். கலைவாணி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ஸ்ரீப்ரியா தேன்மொழி, மாவட்ட சுகாதார அலுவலா்கள் ராம்கணேஷ் (புதுக்கோட்டை), விஜயகுமாா் (அறந்தாங்கி), எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட திட்ட மேலாளா் இளையராஜா, மாநகா் நல அலுவலா் காயத்ரி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.