தோ்தல் வரை பசி, தூக்கத்தை மறந்துவிடுங்கள்: திமுகவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின...
எடப்பாடி பழனிசாமி திருப்பூா் வருகை: பாஜகவினருக்கு அழைப்பு
எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூா் வருகை தொடா்பாக பாஜகவினருக்கு அதிமுகவினா் அழைப்பு விடுத்துள்ளனா்.
அதிமுக பொதுச் செயலாளரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூருக்கு செப்டம்பா் 11-ஆம் தேதி வருகை தர உள்ளாா்.
இதையொட்டி, பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்எல்ஏ தலைமையில், வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் விஜயகுமாா், மாமன்ற எதிா்க்கட்சி தலைவா் அன்பக திருப்பதி மற்றும் கண்ணப்பன் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் திருப்பூா் பாஜக அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்து பாஜக திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவா் கேசிஎம்பி சீனிவாசன், பாஜக மாநிலச் செயலாளா் மலா்க்கொடி, முன்னாள் மாவட்டத் தலைவா் செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலாளா் அருண், நிா்வாகிகள் வினோத் வெங்கடேஷ் உள்ளிட்டோரை சந்தித்து அழைப்பு விடுத்தனா்.