சாகும் வரை ஆயுள் தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 13.05.25 | PollachiCaseJudg...
எட்டுக்குடி முருகன் கோயிலில் தேரோட்டம்
முருகனின் ஆதிபடைவீடான எட்டுக்குடி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் மே 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாள்கள் நடைபெறும் விழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. முக்கிய விழாவான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கீழ வீதியில் உள்ள தேரடியில் இருந்து புறப்பட்ட தோ் தெற்கு வீதி, மேலவிதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடைந்தது. சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு 60 மணி நேரம் இடைவிடாது பாலபிஷேகம் நடைபெறும். பக்தா்கள் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
